/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நடைபெறும் லோக்சபா தேர்தல் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் தமிமுன் அன்சாரி பேட்டி
/
நடைபெறும் லோக்சபா தேர்தல் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் தமிமுன் அன்சாரி பேட்டி
நடைபெறும் லோக்சபா தேர்தல் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் தமிமுன் அன்சாரி பேட்டி
நடைபெறும் லோக்சபா தேர்தல் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் தமிமுன் அன்சாரி பேட்டி
ADDED : ஏப் 04, 2024 03:40 AM
ராமநாதபுரம், : தற்போது நடக்கும் லோக்சபா தேர்தல் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல், நாட்டின் பாதுகாப்பிற்கான தேர்தல், என மனித நேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்தார்.
ராமநாதபுரத்தில் அவர் கூறியதாவது:
ஏப்.19 நாட்டை பாதுகாப்பதற்கான நாள். தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து தமிழகம், கேரளா, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இண்டியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம். தேர்தல் பரப்புரையாக தஞ்சாவூரில் துவங்கி, ராமநாதபுரத்தில்பிரசாரம் செய்ய வந்துஉள்ளேன்.
இங்கு தி.மு.க., கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி அதிருப்பதியில்லாத எம்.பி., யாக செயல்பட்டுள்ளார். 39 தொகுதிகளிலும் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்.
வட இந்தியாவில் இருந்து வரும் செய்திகள் மகிழச்சியை தருவதாக உள்ளது. ஆட்சி மாற்றம் ஏற்படும் என்பதால் ஆக்கபூர்வமான விஷயங்களை பேசாமல் சர்ச்சையான விஷயங்களை பிரதமர் மோடி பேசி வருகிறார். மக்களை திசை திருப்பி வருகிறார்.
கச்சத்தீவை சர்ச்சை தீவாக மாற்றி வருகிறார். நாட்டில் பல்வேறு பிரச்னைகள் பேசு பொருளாக இருக்கும் போது சர்ச்சை கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.
காஷ்மீர், லடாக், அருணாசலபிரதேசத்தில் பல ஆயிரம் சதுர மைல்களை சீனா ஆக்கிரமித்துள்ளது.
அப்பகுதியில் 150 வீடுகளை கட்டியுள்ளது. 30 கிராமங்களுக்கு பெயரை சீன மொழியில் மாற்றியுள்ளது. இது குறித்து கேள்வி எழுப்பாமல் இருக்கவே பிரதமர் கச்சத்தீவு பற்றி பேசுகிறார். இரு நாட்டு மீனவர்களும் சுமுகமாக மீன் பிடிப்பதற்கான தீர்வு காணப்பட வேண்டும்.
அதை விடுத்து கச்சத்தீவை மீட்போம் என்ற பொய்யான தகவல்களை தெரிவித்து அப்பாவி மீனவர்களை ஏமாற்ற வேண்டாம், என அவர் தெரிவித்தார்.
மாவட்ட செயலாளர்செய்யது இப்ராஹிம், பொருளாளர் நாகூர்மீரான், மாநில இளைஞரணி செயலாளர் பைசல், மாநில செயற்குழு உறுப்பினர்கள் அப்துல் நசீர், அபுல்கலாம் உடனிருந்தனர்.

