/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
*போதிய மழையின்றி பனை மரங்கள் கருகியதால்..* பதநீர், நுங்கு சீசன் நேரத்திலும் வருவாய் இழப்பு
/
*போதிய மழையின்றி பனை மரங்கள் கருகியதால்..* பதநீர், நுங்கு சீசன் நேரத்திலும் வருவாய் இழப்பு
*போதிய மழையின்றி பனை மரங்கள் கருகியதால்..* பதநீர், நுங்கு சீசன் நேரத்திலும் வருவாய் இழப்பு
*போதிய மழையின்றி பனை மரங்கள் கருகியதால்..* பதநீர், நுங்கு சீசன் நேரத்திலும் வருவாய் இழப்பு
ADDED : ஏப் 08, 2024 05:33 AM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தின் அடையாளமாகவும், மாநில மரமாக உள்ள பனை மரங்கள் போதிய தண்ணீரின்றி கருகியதால் சீசன் நேரத்தில் பதநீர், பனங்காய் காய்ப்பு குறைந்து இதை நம்பி பிழைக்கும் தொழிலாளர்கள் வருமானமின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம், அதனை சுற்றியுள்ள கிராமங்களில் ஏராளமான பனை மரங்கள் உள்ளன. அவற்றின் ஓலை, குருத்தை பயன்படுத்தி பெட்டிகள், பாய்கள் மற்றும் பதநீரில் பனங்கருப்பட்டி தயாரிக்கின்றனர். பதநீர், நுங்கு விற்பனை செய்கின்றனர். இத்தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர்.
ரியல் எஸ்டேட், செங்கல் சூளைகளுக்காக ஆண்டுதோறும் ஏராளமான பனை மரங்கள் வெட்டி அழிக்கப்படுகின்றன. கடந்த 2023 ல் வடகிழக்கு பருவமழை பெரிய அளவில் பெய்யவில்லை. அப்போது நிறைந்திருந்த கண்மாய், ஊருணிகள் தற்போது வெயிலின் தாக்கத்தால் வறண்டு வருகின்றன.
இதனால் போதிய தண்ணீரின்றி கிராமங்களிலும், ராமேஸ்வரம், மதுரை தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள பனைமரங்கள் காய்ந்து வருகின்றன. பனைகளை மட்டுமே நம்பியுள்ள தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பனைத்தொழிலாளர்கள் கூறுகையில், பத்து ஆண்டுகளுக்கு முன்பு பனை மரத்தோப்புகள், கிராமச்சாலை ஓரங்களில் வரிசையாக பனைமரங்கள் இருந்தன. தற்பாது ரியல் எஸ்டேட் ஆதிக்கத்தால் பனை மரங்கள் அழிக்கப்பட்டு பொட்டல் காடாக மாறியது. மேலும் போதிய தண்ணீர் கிடைக்காமல் பனை மரங்கள் கருகிவிட்டன. பனைத் தொழிலாளர் மாற்றுத்தொழிலுக்கு மாறிவிட்டனர்.
தற்போது ஊரில் மரம் ஏறுவதற்கு கூட ஆளில்லை. பதநீர், நுங்கு சீசன் நேரத்தில் குறைவாக கிடைப்பதால் வருமானம் குறைந்துள்ளது. எனவே மாநில மரமான பனைமரங்களை பாதுகாத்து எண்ணிக்கையை அதிகரிக்கவும், கூடுதலாக பனை மரங்கள் நடுவதற்கும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
----

