/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மழைக்கு சேதமடைந்த ரோட்டில் சிரமம்
/
மழைக்கு சேதமடைந்த ரோட்டில் சிரமம்
ADDED : மே 25, 2024 05:40 AM

கமுதி, : கமுதி அருகே நீராவி கரிசல்குளம் கிராமத்திற்கு செல்லும் ரோடு மழைக்கு சேதமடைந்துள்ளதால் மக்கள் கடந்துசெல்ல முடியாமல் சுற்றிச் செல்லும் அவலநிலை ஏற்பட்டுஉள்ளது.
கமுதி அருகே நீராவி கரிசல்குளம் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். கமுதி அருகே காவடிப்பட்டியில் இருந்து சின்ன கரிசல்குளம் வழியாக நீராவி கரிசல்குளத்துக்கு 7 கி.மீ ரோடு வசதி உள்ளது. இந்த ரோட்டை கிராம மக்கள் பயன்படுத்தி வந்தனர்.
ரோடு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. கடந்த 2 நாட்களாக கமுதி அதனை சுற்றியுள்ள பகுதியில் மழை பெய்தது. அப்போது நீராவி கரிசல்குளத்திற்கு செல்லும் ரோட்டில் அரிப்பு ஏற்பட்டு சேதமடைந்துள்ளது. இவ்வழியே டூவீலர், வாகனங்களில் பொதுமக்கள் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்.
இதையடுத்து 14 கி.மீ., கிளாமரம் வழியாக மக்கள் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து ரோட்டை சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

