/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி ஈஸ்வரன் மற்றும் மீனாட்சி கோயில்களில் சித்திரை தேரோட்டம் நாளை விழா நிறைவு

ADDED : ஏப் 23, 2024 12:11 AM

பரமக்குடி : பரமக்குடி ஈஸ்வரன் கோயில் மற்றும் மீனாட்சி அம்மன் கோயில்களில் சித்திரை தேரோட்டம் விமரிசையாக நடந்தது.
பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம்விசாலாட்சி அம்பிகா சந்திரசேகர சுவாமி (ஈஸ்வரன்) கோயிலில் சித்திரை பிரம்மோத்ஸவம் ஏப்.13ல் துவங்கி நடக்கிறது. நேற்று முன்தினம் திருக்கல்யாணம் உற்ஸவம் நடந்தது.
தொடர்ந்து நேற்று காலை 10:30 மணிக்கு விநாயகர், முருகன் வள்ளி, தெய்வானையுடன் தேரில் முன் சென்றனர். பின்னர் பிரியாவிடையுடன் சந்திரசேகர சுவாமி, விசாலாட்சி அம்மன் தனித்தனியாக தேரில் வீதி வலம் சென்றனர்.
*பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நேற்று முன்தினம் மாலை திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. நேற்று காலை 10:45 மணிக்கு சுவாமி அம்பாள் தனித்தனியாக தேரில் எழுந்தருளிசித்திரை தேரோட்டம் நடந்தது.
இக்கோயில்களில் இன்று கொடி இறக்கமும், நாளை உற்ஸவ சாந்தியுடன் விழா நிறைவடைகிறது.