/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நிலத்தடி நீருக்கு சிக்கல்: பெரிய கண்மாயில் நீர்மட்டம் குறைவு ;
/
நிலத்தடி நீருக்கு சிக்கல்: பெரிய கண்மாயில் நீர்மட்டம் குறைவு ;
நிலத்தடி நீருக்கு சிக்கல்: பெரிய கண்மாயில் நீர்மட்டம் குறைவு ;
நிலத்தடி நீருக்கு சிக்கல்: பெரிய கண்மாயில் நீர்மட்டம் குறைவு ;
ADDED : ஏப் 22, 2024 06:59 AM

ஆர்.எஸ்.மங்கலம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் மழையின்றி, நாளுக்குநாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வறட்சியால் ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
இதனால் கிணறுகள், ஆழ்குழாய்கள் ஆகியவற்றில் நீர்மட்டம் 10அடி வரை குறைந்துள்ளதால் விவசாய சாகுடி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தின் இரண்டாவது பெரியகண்மாய் என்ற சிறப்பு பெற்றது ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய். இங்கு பருவ மழையாலும், வைகை அணையில் திறக்கப்பட்ட தண்ணீராலும் 4.5 அடி தண்ணீர் தேக்கப்பட்டிருந்தது.
கண்மாயில் தேங்கிய தண்ணீரை பயன்படுத்தி விவசாயிகள் நெல் விவசாயம் செய்து வந்த நிலையில் அதன் பின் பெய்த பருவ மழையால் பிப்.,ல் கண்மாயில் 4 அடி தண்ணீர் இருந்தது. அதன் பின் தொடர்ந்து நிலவும் வறட்சியால் கண்மாய் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வந்தது.
இந்நிலையில், கடந்த சில வாரங்களில் பெரிய கண்மாயில் தேங்கியிருந்த தண்ணீர் வெப்பத்தால் உறிஞ்சப்பட்டு தற்போது ஒரு அடி தண்ணீர் மட்டுமே உள்ளது. மேலும் பெரிய கண்மாய் கீழ் உள்ள பெரும்பாலான சிறிய கண்மாய்களிலும், சிறிதளவு தண்ணீரே உள்ளது. இதனால் இரண்டாம் போகம் பருத்தி, மிளகாய் சாகுபடி பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டு விவசாயிகளுக்கு மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது.
பெரிய கண்மாய் மற்றும் சிறிய கண்மாயில் தேங்கிய தண்ணீரால் கடந்த சில மாதங்களாக ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதி கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து காணப்பட்ட நிலையில் தற்போது கிணறுகள், ஆழ்குழாய்கள் உள்ளிட்டவைகளில் நிலத்தடி நீர்மட்டம் பத்து அடி வரை கீழே இறங்கி உள்ளது.
இதே நிலை நீடித்தால், இன்னும் சில வாரங்களில் நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்கு சென்று விடும் என மக்கள் கவலை தெரிவித்தனர்.
---

