/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தேவிபட்டினம் நவபாஷாணத்தில் ஆடி அமாவாசை ஏற்பாடு தீவிரம்
/
தேவிபட்டினம் நவபாஷாணத்தில் ஆடி அமாவாசை ஏற்பாடு தீவிரம்
தேவிபட்டினம் நவபாஷாணத்தில் ஆடி அமாவாசை ஏற்பாடு தீவிரம்
தேவிபட்டினம் நவபாஷாணத்தில் ஆடி அமாவாசை ஏற்பாடு தீவிரம்
ADDED : ஆக 03, 2024 04:42 AM

பக்தர்கள் நெரிசலின்றி நீராட வசதி
தேவிபட்டினம்: நாளை(ஆக.4) ஆடி அமாவாசையில் தேவிபட்டினம் நவபாஷாணத்தில் பக்தர்கள் நெரிசலின்றி நீராடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தேவிபட்டினத்தில் பிரசித்தி பெற்ற நவபாஷாண நவக்கிரகம் அமைந்துள்ளது.
இங்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும், திருமண தடை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு பரிகார பூஜைகள் செய்யவும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
ஆடி, தை அமாவாசையில் பல ஆயிரம் பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காக இங்கு வருவது வழக்கம். இந்த நிலையில் நாளை ஆடி அமாவாசை கடைப்பிடிக்கப்படுகிறது.
இதனால் ஆடி அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.
நவபாஷாணத்தை நிர்வகித்து வரும் ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் பக்தர்கள் நவக்கிரகம் அமைந்துள்ள கடல் பகுதி வரை புனித நீராடுவதற்கும், புனித நீராடிய பக்தர்கள் மாற்றுப் பாதையில் திரும்பி வருவதற்கும் கம்புகளால் தனித்தனி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் முதியவர்கள் எளிதாக சென்று வரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்களுக்கான ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலைத்துறை சிவகங்கை இணை ஆணையர் பழனிக்குமார், செயல் அலுவலர் நாராயணி, எழுத்தர் தங்கவேல் பாண்டியன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

