/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஓட்டளிப்பதின் அவசியம் உணர்த்திய தொழிலாளி
/
ஓட்டளிப்பதின் அவசியம் உணர்த்திய தொழிலாளி
ADDED : ஏப் 20, 2024 05:03 AM

ராமநாதபுரம்: ஓட்டளிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும்வகையில் ராமநாதபுரத்தில் டிரைசைக்கிள்தொழிலாளி ஒருவர்நடக்க முடியாத மனைவியை டிரைசைக்கிளில் அழைத்து வந்து ஓட்டளித்தார்.
ராமநாதபுரம் புளிக்காரத்தெருவை சேர்ந்தவர்நாகரெத்தினம் 70, இவரது மனைவி ஜெயலட்சுமி. இருவரும் புளிக்கார தெருவில் இருந்து 1.5 கி.மீ., தொலைவில் உள்ள நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஓட்டுச்சாவடியில் ஓட்டுப்போட வேண்டும்.
ஜெயலட்சுமி மூட்டு வலியால் நடக்க முடியாதநிலையில் அவதிப்பட்டு வந்தார். எப்படியும் ஓட்டளிக்க செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் நாகரெத்தினம் தனது மனைவியை டிரைசைக்கிளில் வைத்து ஓட்டுச்சாவடிக்கு அழைத்து வந்தார்.
இருவரும் ஓட்டளித்த பின் அதே டிரை சைக்கிளில் மனைவியை ஏற்றிகொண்டு தனது வீடு திரும்பினார். தள்ளாத வயதிலும், நடக்க முடியாத நிலையிலும் ஓட்டளிக்க வேண்டும் என்ற ஒரே லட்சியத்துடன் வந்த காட்சி அனைவரும் ஏன் ஓட்டுப்போட வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக இருந்தது.

