/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மூக்கையூர் கடலுக்குள் அமைக்கப்பட்ட பாலத்தில் எச்சரிக்கை பலகை தேவை கோடை விடுமுறையில் கூட்டம் குவியுது
/
மூக்கையூர் கடலுக்குள் அமைக்கப்பட்ட பாலத்தில் எச்சரிக்கை பலகை தேவை கோடை விடுமுறையில் கூட்டம் குவியுது
மூக்கையூர் கடலுக்குள் அமைக்கப்பட்ட பாலத்தில் எச்சரிக்கை பலகை தேவை கோடை விடுமுறையில் கூட்டம் குவியுது
மூக்கையூர் கடலுக்குள் அமைக்கப்பட்ட பாலத்தில் எச்சரிக்கை பலகை தேவை கோடை விடுமுறையில் கூட்டம் குவியுது
ADDED : ஏப் 12, 2024 10:34 PM
சாயல்குடி : கோடை விடுமுறையில்கூட்டம் குவியும் நிலையில் மூக்கையூர் கடலுக்குள் அமைக்கப்பட்ட பாலத்தில் எச்சரிக்கை பலகை அமைக்க வேண்டும்.
சாயல்குடி அருகே மூக்கையூர் மன்னார் வளைகுடா கடற்கரையோரத்தில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.119 கோடியில் கட்டப்பட்ட துறைமுகத்தின் அருகே 500 மீ., நீளத்திற்கு கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் இரு புறங்களிலும் கடலுக்குள் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
கடற்கரையில் இருந்து 500 மீ.,க்கு பாறைகளை கொட்டி அதன் மீது கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இவை துாண்டில் வளைவு பாலம் என அழைக்கப்படுகிறது. சுற்றிலும் மும்முனை அலைத்தடுப்பு கற்கள் ஏராளமாக குவிக்கப்பட்டுள்ளன.
தற்போது கோடை விடுமுறை துவங்கியுள்ளதால் பிற்பகல் மற்றும் மாலை நேரங்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மூக்கையூர் கடற்கரை மற்றும் மீன்பிடி துறைமுகத்திற்கு வருகின்றனர்.
கடலுக்குள் 500 மீ., தொலைவில் அமைக்கப்பட்ட கடல் பாலத்தில் சென்று அங்கிருந்து அலைத்தடுப்பு கற்களின் மீது ஏறி நின்று ஆபத்தான முறையில் செல்பி எடுக்கின்றனர். ஒரு சிலர் இன்னும் ஒருபடி முன்னே சென்று ஆழ்கடல் அருகே அலை வீசக்கூடிய இடத்தில் ஆபத்தான முறையில் செல்பி எடுத்தும் மகிழ்கின்றனர்.
பெரும்பாலானோர் பாறை கற்களின் இடுக்கில்மாட்டிக் கொண்டு வெளியே வருவதற்கு பிறரின் உதவியை நாட வேண்டியுள்ளது. சுற்றுலாபயணிகள் கூறியதாவது:
பொழுது போக்கு இடமாக திகழும் மூக்கையூர் மீன்பிடி துறைமுக கடல் பாலத்திற்கு நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள்மற்றும் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். அதிக ஆழமான இந்த கடலில் ஆபத்தான முறையில் செல்பி எடுப்பதால் விபத்து அபாயம் உள்ளது.
இப்பகுதியில் அசம்பாவிதங்களை தடுக்கவும், குற்றங்களை தடுப்பதற்கும் போலீசார் இல்லை. இதனால் பாதுகாப்பு குறைபாடு ஏற்படுகிறது.
எனவே கடலில் உள்ள பாலத்தில் மீன் பிடி துறைமுகம் சார்பில் எச்சரிக்கை விழிப்புணர்வு பலகை அமைக்க வேண்டும். பாதுகாப்பிற்கு போலீசார் ரோந்து சுற்ற வேண்டும் என்றனர்.

