/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருப்புல்லாணி அருகே ஊருணியில் பிடிபட்ட அரிய வகை சிறுத்தை மீன்
/
திருப்புல்லாணி அருகே ஊருணியில் பிடிபட்ட அரிய வகை சிறுத்தை மீன்
திருப்புல்லாணி அருகே ஊருணியில் பிடிபட்ட அரிய வகை சிறுத்தை மீன்
திருப்புல்லாணி அருகே ஊருணியில் பிடிபட்ட அரிய வகை சிறுத்தை மீன்
ADDED : ஜூலை 16, 2024 05:55 AM

திருப்புல்லாணி : திருப்புல்லாணி அருகே தாதனேந்தல் ஊராட்சி பள்ளபச்சேரி வடக்கு ஊருணியில் நேற்று காலை அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ரத்தீஸ், நவீன் ஆகியோர் தூண்டில் போட்டு மீன் பிடித்த போது 200 கிராம் அரிய வகை சிறுத்தை மீன் சிக்கியது.
அதனை பாதுகாப்பாக தொட்டியில் பராமரிக்கின்றனர். தாதனேந்தல் ஊராட்சி இயற்கை ஆர்வலர் ராஜேந்திரன் கூறியதாவது:
அரசால் தடை செய்யப்பட்ட தேளி மீன்கள் பல ஊருணிகள், கண்மாய்களில் சத்தம் இல்லாமல் அதிகரிக்கிறது. இவ்வகை தேளி மீன்களை சாப்பிடுவதால் பல்வேறு உடல் உபாதைகளுக்கும் வழிவகுக்குகிறது.
இங்கு பிடிபட்ட மீன் வித்தியாசமான வடிவமைப்புடன் சொரசொரப்பாக சிறுத்தை போன்று அடர்நிற புள்ளிகளுடன் காணப்படுகிறது. இந்த அரிய வகை மீனைப் பற்றிய தகவல்களை மீன்வளத் துறையினர், மீன் ஆராய்ச்சி விஞ்ஞானிகள் தெளிவுப்படுத்தினால் பயனுள்ளதாக இருக்கும்.
எனவே பாதுகாப்பாக இம்மீனை தொட்டியில் பராமரித்து வருகிறோம் என்றார்.