/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
த.வெ.க.,வினர் போலீசார் வாக்குவாதம்
/
த.வெ.க.,வினர் போலீசார் வாக்குவாதம்
ADDED : நவ 02, 2025 02:16 AM

புதுக்கோட்டை: பு துக்கோட்டையில், சாலை ஓரங்களில் வெயில், மழையில் கஷ்டப்பட்டு, பழக்கடை, பூக்கடை நடத்தி வரும் வியாபாரிகளுக்கு நேற்று த.வெ.க., சார்பில், வணிகக்குடை வழங்கப்பட்டது.
இதற்காக, த.வெ.க., புதுக்கோட்டை மாவட்ட செயலர் பர்வேஸ், கட்சி நிர்வாகிகளுடன் சைக்கிளில் வந்து வணிகர்களுக்கு குடை அளித்தார். அவரை பின் தொடர்ந்து, ஜீப், கார், பைக்குகள் அணிவகுத்தன.
பிருந்தாவனம் பகுதியில் வணிகருக்கு குடை அளித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த போலீசார், அனுமதி இன்றி ரோடுஷோ போன்று சைக்கிள் மற்றும் வாகனங்களில் வந்தது தொடர்பாக த.வெ.க., நிர்வாகிகளை தடுத்தனர்.
இதனால், போலீசாருக்கும், த.வெ.க., நிர்வாகிகளுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பானது.

