/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
'சட்டத்தை' முந்திய 'சுற்றுச்சூழல்' துறை அதிகாரிகளுக்கு சட்ட அமைச்சர் 'டோஸ்'
/
'சட்டத்தை' முந்திய 'சுற்றுச்சூழல்' துறை அதிகாரிகளுக்கு சட்ட அமைச்சர் 'டோஸ்'
'சட்டத்தை' முந்திய 'சுற்றுச்சூழல்' துறை அதிகாரிகளுக்கு சட்ட அமைச்சர் 'டோஸ்'
'சட்டத்தை' முந்திய 'சுற்றுச்சூழல்' துறை அதிகாரிகளுக்கு சட்ட அமைச்சர் 'டோஸ்'
ADDED : மார் 09, 2024 12:51 AM

புதுக்கோட்டை,:புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோவில்களுக்கு, 5 கோடி ரூபாய் வழங்குதல், அறநிலையத்துறை உதவி ஆணையருக்கு புதிய அலுவலக கட்டுமான பணிக்கான, பூமி பூஜை அடிக்கல் நாட்டு விழா உள்ளிட்ட 16 நிகழ்ச்சிகளை, சென்னை தலைமை செயலகத்தில் இருந்து, வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக, தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார்.
தாமதம்
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, காட்டுப்பட்டி புதிய அடுக்குமாடி குடியிருப்பு விழாவிலும், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலக பூமி பூஜை விழாவிலும் பங்கேற்க உள்ளதாக, செய்தித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.
எனினும், அறநிலையத்துறை உயர் அதிகாரிகள், மாவட்டத்தின் மூத்த அமைச்சரான ரகுபதியை சந்தித்து, அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகம் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்தனர்.
புதுக்கோட்டையில் பூமி பூஜை விழாவிற்கு அமைச்சர் மெய்யநாதன் 10:30 மணிக்கே வந்து விட்டார்; ஆனால், அமைச்சர் ரகுபதி வரவில்லை. எனவே, அமைச்சர் மெய்யநாதன் பூமி பூஜை விழாவை நடத்தி முடித்து விட்டு, அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார்.
'ஈகோ'
அடுத்த சில நிமிடங்களில் அமைச்சர் ரகுபதி, அந்த விழாவில் பங்கேற்க வந்தார். விழா முடிந்து விட்டதை அறிந்து, கோபமடைந்தார்.
இணை ஆணையர் ஞானசேகரனை அழைத்து, ''முதல்வர் சென்னையில் துவங்குவதற்கு முன், இங்கு விழா நடத்துவதற்கு யார் உங்களுக்கு அனுமதி அளித்தது... எப்படி விழா நடத்தலாம்; முதல்வரை விட நீங்கள் அதிகாரம் படைத்தவரா,'' என கடுமையாக, 'டோஸ்' விட்டார். அதிகாரி பதில் அளிக்காமல், அப்படியே இருந்தார்.
மேலும், அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டை கலெக்டர் மெர்சி ரம்யாவிடம், நடந்த சம்பவம் குறித்து கூறி, இணை ஆணையர் ஞானசேகரனிடம் விளக்கம் கேட்குமாறு உத்தரவிட்டு, கோபத்துடன் புறப்பட்டு சென்றார்.
முன்னதாக, ''என்னை இந்த விழாவுக்கு அழைத்தவர்கள் யாரப்பா...' என, அவர் கேட்டார். அழைத்த அதிகாரிகள் மவுனம் காத்தனர்.
புதுக்கோட்டையில் இரு அமைச்சர்களுக்கு இடையே நிலவும், 'ஈகோ' காரணமாக, சமீப காலமாக அதிகாரிகள் திண்டாடி வருகின்றனர்.

