/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
மாஜி அமைச்சர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
/
மாஜி அமைச்சர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
ADDED : செப் 03, 2025 11:56 PM
புதுக்கோட்டை; இலுப்பூர் பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் உள்ள தனியார் பள்ளிக்கு, நேற்று காலை 8:30 மணியளவில், இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து, அந்த பள்ளிக்கும், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிற்கும் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் தனியார் பள்ளியிலும், முன்னாள் அமைச்சரும், விராலிமலை எம்.எல்.ஏ.,வுமான விஜயபாஸ்கர் வீட்டிலும் சோதனை நடத்தினர்.
ஆபத்தான வெடி பொருட்களும் இல்லாததால், வெறும் புரளி என்று தெரிய வந்தது.