/
உள்ளூர் செய்திகள்
/
பெரம்பலூர்
/
மகன் அடித்து கொலை 'பாச'க்கார தந்தை கைது
/
மகன் அடித்து கொலை 'பாச'க்கார தந்தை கைது
ADDED : ஆக 28, 2025 02:16 AM
பெரம்பலுார்:பெரம்பலுார் அருகே குடும்ப பிரச்னையில், மகனை கடப்பாரையால் அடித்துக் கொன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலுார் மாவட்டம், அ.மேட்டூரைச் சேர்ந்தவர் ராஜா, 43. இவருக்கு, இரு மனைவியர். முதல் மனைவி ரேவதி, இரண்டாவது மனைவி உமா. முதல் மனைவி ரேவதியின் மகன் ராசுக்குட்டி, 20, நெல் அறுவடை இயந்திர டிரைவர்.
முதல் மனைவியுடன் ராஜா, அடிக்கடி சண்டை போட்டார். இதனால், இவருக்கும் ரேவதி மகன் ராசுகுட்டிக்கும், அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில், அ.மேட்டூர் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் சிலையை வைத்து அலங்கார ஏற்பாடுகளை, ராசுகுட்டியும், அவர்களது நண்பர்களும் செய்தனர். நேற்று முன்தினம் இரவு, அதே பகுதியில் ராசுகுட்டி, அவரது நண்பர்களுடன் படுத்து துாங்கினார்.
அதிகாலை அங்கு சென்ற ராஜா, கடப்பாரையால் ராசுகுட்டியின் தலையில் அடித்து, அவரை கொலை செய்தார். இதுகுறித்து அரும்பாவூர் போலீசார் வழக்கு பதிந்து, ராஜா மற்றும் இரண்டாவது மனைவி உமா ஆகிய இருவரையும் கைது செய்தனர்.