ADDED : பிப் 14, 2024 12:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரம்பலூர்: பெரம்பலூர் ஆயுதப்படை குடியிருப்பில், ஆயுதப்படை முதல்நிலை காவலர் சதீஸ்குமார்,30, இவர், ஆயுதப்படை குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மனைவி பிருந்தா,24,
இவர், நேற்று இரவு செல்போனில் வீட்டிற்கு வெளியே பேசிக்கொண்டிருந்த போது, ஆயுதப்படை காவலர் பிரபாகரன் ,34, குடிபோதையில், தவறான நோக்கத்தோடு பிருந்தாவை மேல் தளத்திற்கு தூக்கி செல்ல முயற்சித்தார்.
அவர் கூச்சலிட அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டனர். இதுகுறித்து, பிருந்தா கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, பிரபாகரனை கைது செய்தனர்.

