sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

 கோவை புறநகர் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவாரா?  எம்.பி., வேட்பாளரிடம் எகிறும் எதிர்பார்ப்பு

/

 கோவை புறநகர் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவாரா?  எம்.பி., வேட்பாளரிடம் எகிறும் எதிர்பார்ப்பு

 கோவை புறநகர் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவாரா?  எம்.பி., வேட்பாளரிடம் எகிறும் எதிர்பார்ப்பு

 கோவை புறநகர் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவாரா?  எம்.பி., வேட்பாளரிடம் எகிறும் எதிர்பார்ப்பு


ADDED : மார் 28, 2024 05:27 AM

Google News

ADDED : மார் 28, 2024 05:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார் : நீலகிரி தொகுதிக்குட்பட்ட கோவை புறநகரில், ஏராளமான கோரிக்கைகளை புதிதாக தேர்வாகும் எம்.பி., நிறைவேற்றுவாரா என மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

நீலகிரி எம்.பி., தொகுதியில், கூடலூர், ஊட்டி, குன்னுார் ஆகிய மூன்று தொகுதிகளும், கோவை மாவட்டத்தில், மேட்டுப்பாளையம் தொகுதியும், திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி தொகுதியும், ஈரோடு மாவட்டத்தில் பவானிசாகர் தொகுதியும் உள்ளன. இதில் கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் தொகுதி மற்றும் அன்னுார் ஒன்றியத்தில் ஏராளமான கோரிக்கைகள் மக்களிடம் உள்ளன.

நவோதயா பள்ளிகள்


இதுகுறித்து புறநகர் மக்கள் கூறியதாவது :

நாடு முழுவதும் மிகக் குறைந்த கட்டணத்தில் மும்மொழி திட்டத்துடன் மத்திய அரசின் நவோதயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. ஆனால் நீலகிரி தொகுதியில் நவோதயா பள்ளி அமைக்க எம்.பி.,கள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இத்துடன் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளும் நீலகிரி தொகுதிக்குட்பட்ட கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் அன்னுார் தொகுதியில் அமைக்கப்படவில்லை.

கோவை புறநகர் பகுதியில் 200க்கும் மேற்பட்ட ஸ்பின்னிங் மில்கள் உள்ளன. நிலையில்லாத பஞ்சு விலை, நூல் ஏற்றுமதிக்கு கட்டுபடியாகும் விலையில்லாதது, பருத்தி விளைச்சல் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 50 சதவீத ஸ்பின்னிங் மில்கள் மூடப்பட்டுள்ளன. பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இந்நிலையில் இங்கு தேர்ந்தெடுக்கப்படும் எம்.பி., இங்குள்ள நூற்பாலைகளுக்கு புத்துயிர் ஏற்பட பருத்தி, பஞ்சு ஏற்றுமதிக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நூல் ஏற்றுமதியை ஊக்குவிக்க மத்திய அரசிடம் வலியுறுத்தி திட்டங்கள் வகுக்க வேண்டும்.

அதிக வட்டி


பருத்தி விளைச்சல் அதிகரிக்க பருத்தி பயிரிடுவோருக்கு ஊக்கம் அளிக்க வேண்டும். அதிக விளைச்சல் தரும் உயர் ரக பருத்தி விதைகளை விவசாயிகளுக்கு மானியம் அல்லது இலவசமாக வழங்க வேண்டும். நூற்பாலைகள் சிரமமான நிலையில் உள்ளதால் கடனை திருப்பி செலுத்தும் காலத்தை தள்ளி வைக்க வேண்டும். பிற மாநிலங்களை விட தமிழகத்தில் நூற்பாலைகளுக்கான மின் கட்டணம் மிக அதிகமாக உள்ளது. மின் கட்டணத்தை குறைக்க வேண்டும். வங்கிகள் நூற்பாலைகளின் கடனுக்கான வட்டி அதிக அளவில் வசூலிக்கின்றன. வங்கி வட்டியை குறைக்க வேண்டும். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் அதிக அளவில் வேலை வாய்ப்பு தரும் வகையில் கோவை புறநகர் பகுதியில் அன்னுார் மற்றும் மேட்டுப்பாளையத்தில் துவக்க வேண்டும்.

தொழிற்சாலைகள் தங்குதடையின்றி மூலப்பொருட்களை கொண்டு வரவும் உற்பத்தி பொருட்களை கொண்டு செல்லவும் உதவியான கோவை --சத்தி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி இரண்டு ஆண்டுகளாக முடங்கி கிடக்கிறது.

விரைவில் துவக்கி நிறைவேற்ற வேண்டும். கரூரிலிருந்து நரசிம்மநாயக்கன்பாளையம் வரை உள்ள கோவை-கரூர் ஆறு வழி பசுமை சாலை பணி முடங்கிக் கிடக்கிறது. அந்தத் திட்டத்தையும் உடனடியாக துவக்கி நிறைவேற்ற வேண்டும். மத்திய அரசின் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., போன்ற மிகப் பெரிய கல்வி நிறுவனங்கள் கோவை மாவட்டத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகம் பேருக்கு வேலை தருகிற தொழிற்சாலைகளுக்கான கிளஸ்டர் ஏற்படுத்த வேண்டும். தொழில் துவங்குவோருக்கு மானியம் அளிக்க வேண்டும். இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் கோவை புறநகரில் மீண்டும் தொழில் பெருகும். வேலைவாய்ப்பும், பணப்புழக்கமும் அதிகரிக்கும். இவ்வாறு புறநகர் மக்கள் தெரிவித்தனர்.

தேசிய நெடுஞ்சாலையாக மாறுமா?

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, தொட்டபெட்டா, கோடநாடு, குன்னூர் உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளை காண தமிழகம் மட்டும் இல்லாமல் வெளிமாநிலங்களில் இருந்தும் ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஆனால் அவிநாசி, கருவலூர், அன்னூர் வழியாக மேட்டுப்பாளையம் வரை இன்னும் மாநில நெடுஞ்சாலையாகவே உள்ளது. இதை நான்கு வழிச்சாலையாக மாற்றி தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்த வேண்டும் என 10 ஆண்டுகளாக மக்கள் கோரி வருகின்றனர். ஆனால் அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., எம்.பி.,க்கள் இதற்காக எந்த முயற்சியும் செய்யவில்லை.








      Dinamalar
      Follow us