/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நகரில் உலா வந்த காட்டெருமை; அச்சத்தில் பொதுமக்கள்
/
நகரில் உலா வந்த காட்டெருமை; அச்சத்தில் பொதுமக்கள்
ADDED : மே 01, 2025 11:18 PM

கூடலுார்; கூடலுாரில் நேற்று முன்தினம் இரவு ஓவேலி வன சோதனை சாவடி அருகே, காட்டெருமை முகாமிட்டது. அப்பகுதியினர் அதனை விரட்டினர்.
அங்கிருந்து சென்ற காட்டெருமை, தனியார் காபி தோட்டம் வழியாக, அக்ரஹாரம் குடியிருப்பு பகுதிக்குள் வந்தது. அங்கிருந்து இரவு, 8:00 மணிக்கு பழைய பஸ் ஸ்டாண்ட் ஊட்டி தேசிய நெடுஞ்சாலை பகுதிக்குள் நுழைந்தது.
அதனை பார்த்த பொதுமக்கள், வாகன ஓட்டுனர்கள், வியாபாரிகள் அச்சமடைந்தனர். சிலர் சப்தமிட்டு விரட்டினர். காட்டெருமை தேசிய நெடுஞ்சாலை வழியாக, புதிய பஸ் ஸ்டாண்ட் சென்றது. வனத்துறையினர் அங்கிருந்து அதனை, விரட்டினர். பின், வனப்பகுதிக்குள் சென்றது.
வியாபாரிகள் கூறுகையில், 'கூடலுார் நகருக்குள் காட்டெருமை நுழைந்து அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மீண்டும் இது போன்ற சம்பவம் ஏற்படுவதை தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

