/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மஞ்சூர் பள்ளியில் முப்பெரும் விழா
/
மஞ்சூர் பள்ளியில் முப்பெரும் விழா
ADDED : பிப் 14, 2024 12:36 AM
மஞ்சூர்;மஞ்சூர் அருகே பிக்கட்டியில் உள்ள பிரியதர்ஷினி மெட்ரிக் பள்ளியில், 'ஆண்டு விழா, விளையாட்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா,' என, முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியை உமா மகேஸ்வரி தலைமை வகித்தார். பி.டி.ஏ., தலைவர் பிரபாவதி துணைத்தலைவர் அமுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், மாணவ, மாணவிகள் மத்தியில் பேச்சு, கவிதை ,கட்டுரை, ஓவியம் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. குறிப்பாக மாணவர்களின் படுகர் இன நடனம் மற்றும் மழலைகளின் அணிவகுப்பு அனைவரையும் கவர்ந்தது. தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
மஞ்சூர் அரசு மகளிர் உயர்நிலை பள்ளியில் நடந்த விழாவில் பள்ளி தலைமை ஆசிரியை ஆனந்தி தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் யோகேஸ்வரி, துணைத் தலைவர் கமலா முன்னிலை வகித்தனர். மாணவிகள் மத்தியில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
விழாவில் பெற்றோர்கள், ஆசிரியர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

