ஓட்டுப்பதிவு இயந்திர காப்பறைக்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு
ஓட்டுப்பதிவு இயந்திர காப்பறைக்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு
ADDED : ஏப் 24, 2026 06:47 PM

ஊட்டி: நீலகிரியில் மூன்று சட்டசபை தொகுதிகளின் மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்கள், மூன்று அடுக்கு பாதுகாப்புடன், சி.சி.டி.வி., கேமரா உதவியுடன் கண்காணிக்கப்படுகிறது.
கலெக்டர் லட்சுமி பவ்யா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
ஓட்டுப்பதிவு நிறைவடைந்த பிறகு, ஓட்டுப்பதிவுக்கு மேற்கொள்ளப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்; வாக்காளர் அளித்த ஒட்டினை சரிபார்க்கும் கருவிகள் ஆகியவை, வேட்பாளர்கள் அல்லது அவர்களின் பிரதிநிதிகள் மற்றும் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட பொது பார்வையாளர்கள் முன்னிலையில், ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் வைக்கப்பட்டுள்ளது. காப்பறைக்கு ஆயுதம் தாங்கிய மூன்று அடுக்கு பாதுகாப்பு மற்றும் கேமராவின் கீழ் கண்காணிப்பு பணிகள் நடக்கிறது.
போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் காப்பறையின் பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்க ஏதுவாக, தங்களின் பிரதிநிதிகள் நியமிப்பது குறித்தும், அவர்களை பாதுகாப்பு வளையத்தில் உட்பகுதிக்கு வெளியே, தங்குவதற்கு அனுமதிக்கப்படுவது குறித்தும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும், 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கைக்கு போட்டியிட்ட வேட்பாளர்கள் அல்லது அவர்களின் பிரதிநிதிகள் மற்றும் பொது பார்வையாளர்கள் முன்னிலையில் காணொளி பதிவின் கீழ், இந்த காப்பறை திறக்கப்படும்.
