/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குடும்பம் வளம் பெற திருவிளக்கு பூஜை
/
குடும்பம் வளம் பெற திருவிளக்கு பூஜை
ADDED : ஜன 27, 2024 03:14 AM

பந்தலுார்: பந்தலுார் அருகே உப்பட்டி அருள்மிகு செந்துார் முருகன் கோவிலில், திருவிளக்கு பூஜை நடந்தது. கோவில் கமிட்டி தலைவர் செந்தில்வேல் துவக்கி வைத்தார்.
பூஜைகளை கோவில் அர்ச்சகர் சுந்தரராஜா நடத்தி துவக்கி வைத்தார். தொடர்ந்து குழுவின் ஒருங்கிணைப்பாளர் சுமலதா தலைமையில் திருவிளக்கு பூஜை நடத்தப்பட்டது.
அதில், குடும்பம் வளம் பெறவும், குடும்பத்தில் ஒற்றுமை மேம்படவும், உலகம் அமைதி பெற்று, நோயின்றி வாழவும் வலியுறுத்தி மந்திரங்கள் கூறப்பட்டது.
ஒருங்கிணைப்பாளர் கூறுகையில், 'பெண்கள் தங்கள் வீடுகளில் தினந்தோறும் திருவிளக்கு ஏற்றி தியானித்து மனதை ஒருநிலைப்படுத்தி பூஜை செய்தால், தெய்வ அருளுடன் சிறப்பான வாழ்வு கிடைக்கும்,' என்றார். இந்த பூஜையில் உப்பட்டி சுற்று வட்டார பகுதி பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

