/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மாவட்டத்தில் உள்ள வளர்ப்பு மாடுகளுக்கு... பசுந்தீவன தட்டுப்பாடு! பால் உற்பத்தி பாதிக்கப்பட்டதால் சிக்கல்
/
மாவட்டத்தில் உள்ள வளர்ப்பு மாடுகளுக்கு... பசுந்தீவன தட்டுப்பாடு! பால் உற்பத்தி பாதிக்கப்பட்டதால் சிக்கல்
மாவட்டத்தில் உள்ள வளர்ப்பு மாடுகளுக்கு... பசுந்தீவன தட்டுப்பாடு! பால் உற்பத்தி பாதிக்கப்பட்டதால் சிக்கல்
மாவட்டத்தில் உள்ள வளர்ப்பு மாடுகளுக்கு... பசுந்தீவன தட்டுப்பாடு! பால் உற்பத்தி பாதிக்கப்பட்டதால் சிக்கல்
ADDED : மார் 05, 2024 11:21 PM

கூடலுார்;முதுமலை மசினகுடி பகுதியில் வறட்சியின் தாக்கத்தால், வளர்ப்பு மாடுகளுக்கு பசுந்தீவன தட்டுப்பாடு ஏற்பட்டு, பால் உற்பத்தி குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
முதுமலை, மசினகுடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் ஆயிரக்கணக்கான நாட்டு மாடு, எருமைகளை வளர்த்து வருகின்றனர். குடியிருப்பை ஒட்டிய வனப்பகுதிகள் மற்றும் அரசு நிலங்களில் மாடுகளை மேய்ச்சலுக்கு விடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இங்கு, நாள் ஒன்றுக்கு சராசரியாக, 1,500 முதல் 2,000 லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. கோடையில், 500 லிட்டராக குறைந்து விடும்.
கடந்த ஆண்டு, பருவமழை ஏமாற்றிய நிலையில் நடப்பாண்டு கோடை மழையும் பெய்யவில்லை. இதனால், கோடைக்கு முன்பாக கடும் வறட்சி ஏற்பட்டு, தாவரங்கள், புற்கள் கருகி, வளர்ப்பு மாடுகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், தஞ்சாவூர், திருச்சி பகுதிகளில் எடுத்து வரப்படும், 25 கிலோ வரை எடை கொண்ட வைக்கோல் கட்டை,400 ரூபாய்க்கு வாங்கி மாடுகளுக்கு வழங்கி வருகின்றனர்.
எனினும் பசுந்தீவன பற்றாக்குறை; பால் உற்பத்தி, 300 லிட்டருக்கு கீழ் குறைந்து விட்டது. பால் உற்பத்தியை சார்ந்துள்ள விவசாயிகள் வருவாய் இன்றி சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் சக்திகோவிந்தராஜ் கூறுகையில், ''கோடை காலங்களில் கர்நாடகாவில் இருந்து குறைந்த விலைக்கு பசுந்தழைகள், வைகோல் எடுத்து வந்து, மாடுகளுக்கு வழங்கி வந்தோம்.
நடப்பாண்டு, கர்நாடகாவில் இருந்து, பசுந் தழைகளை நீலகிரிக்கு எடுத்துச் செல்ல, கர்நாடகா சோதனை சாவடிகளில் அனுமதிப்பதில்லை.
இதனால், சமவெளி பகுதிகளில் இருந்து எடுத்து வரப்படும், வைக்கோல் கூடுதல் விலை கொடுத்து வாங்கி, மாடுகளுக்கு வழங்கி வருகிறோம். போதிய, உணவு கிடைக்காமல் மாடுகள் இறக்கும் ஆபத்து உள்ளது. எனவே, மாடுகளுக்கு தேவையான பசுந்தலைகளை, அரசு மானிய விலையில் வழங்க வேண்டும். இதற்கு கால்நடை துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,''என்றார்.

