/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குடிநீர் விநியோகம் நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
/
குடிநீர் விநியோகம் நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
குடிநீர் விநியோகம் நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
குடிநீர் விநியோகம் நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
ADDED : பிப் 14, 2024 01:59 AM

பந்தலுார்:பந்தலுார் ஒலிமடா கிராமத்துக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்ட காரணத்தால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பந்தலுார் அருகே நெல்லியாளம் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட, பகுதியில ஒலிமடா கிராமம் அமைந்துள்ளது. இங்கு, 30க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளன. இந்த பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யும் மின் மோட்டார் பழுதடைந்து உள்ளது.
அதனால், நகராட்சி குடிநீர் லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தினர். ஆனால், அந்த பகுதிக்கு நகராட்சி மூலம் குடிநீர் முறையாக வினியோகம் செய்யபடாத நிலையில், கடுப்படைந்த பொதுமக்கள், காலி குடங்களுடன் சாலை அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனை தொடர்ந்து, நகராட்சி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. அதனால் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.