ADDED : மார் 11, 2024 01:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி,;ஊட்டி சாலையில் மரத்தில் வாகனம் மோதி டிரைவர் பலியானார்.
நடுவட்டம் பகுதியை சேர்ந்த சிலர் வாடகை வாகனத்தில் ஊட்டிக்கு வந்தனர்.
கிளன்மார்கன் சந்திப்பில் வாகனம் வந்துகொண்டிருந்த போது நிலைதடுமாறி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. வாகனத்தை ஓட்டி வந்த நடுவட்டம் பகுதியை சேர்ந்த தாஸ், 35, சம்பவ இடத்திலேயே பலியானார். பைக்காரா போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

