/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஆவினில் நுழைந்து பாலை ருசித்த கரடி
/
ஆவினில் நுழைந்து பாலை ருசித்த கரடி
ADDED : டிச 14, 2025 02:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி: ஊட்டி ஆவின் வளாகத்தில் நுழைந்த கரடி, ஏழு பாக்கெட் பாலை ருசித்து சென்றது.
நீலகிரி மாவட்டம், ஊட்டியில் நேற்று முன்தினம் இரவு, ஆவின் நிறுவன வளாகத்தில் நுழைந்த கரடி, டிரேவில் வைக்கப்பட்ட, ஏழு அரை லிட்டர் பாக்கெட் பாலை ருசித்ததுடன், பால் கேன்களை தள்ளிவிட்டு சென்றது.
இந்த காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதையடுத்து ஆவின் நிர்வாகம் சார்பில் வனத்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. வனத்துறையினர் அப்பகுதிகளை ஆய்வு செய்து, கூண்டு வைத்து கரடியை பிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

