/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பராமரிப்பில்லாத நகராட்சி லாரி கண்டு கொள்ளாத நிர்வாகம்
/
பராமரிப்பில்லாத நகராட்சி லாரி கண்டு கொள்ளாத நிர்வாகம்
பராமரிப்பில்லாத நகராட்சி லாரி கண்டு கொள்ளாத நிர்வாகம்
பராமரிப்பில்லாத நகராட்சி லாரி கண்டு கொள்ளாத நிர்வாகம்
ADDED : டிச 23, 2025 07:05 AM

பந்தலுார்: நெல்லியாளம் நகராட்சி குப்பை லாரி பேட்டரி, கயிற்றில் கட்டப்பட்டுள்ளதால் பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது.
நெல்லியாளம் நகராட்சியில், குப்பைகள் சேகரித்து திடக்கழிவு மேலாண்மை திட்டம், செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக பயன்படுத்தப்படும் குப்பை லாரிகள், பழுதடைந்து பராமரிப்பு இல்லாமல், மோசமான நிலையில் உள்ளன. அதல், ஒரு குப்பை லாரியின் பேட்டரி, விழும் நிலையில் இருந்தது. தொடர்ந்து நகராட்சி மூலம் கயிறு வாங்கப்பட்டு, பேட்டரி விழாமல், கட்டி வைக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. மக்கள் கூறுகையில்,'பராமரிப்பில்லாத லாரிகளால் ஏதாவது பாதிப்பு ஏற்படும் முன்பு, பழுதை நீக்கி இயக்க வேண்டும்,' என்றனர்.