/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தமிழக தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை
/
தமிழக தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை
ADDED : மார் 10, 2024 11:02 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்:துடியலூர் அருகே அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு ஆய்வு மேற்கொண்டார். லோக்சபா தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் உள்ளிட்ட தேர்தல் அதிகாரிகள் பல்வேறு தேர்தல் தொடர்பான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை வந்த தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வாக்குச்சாவடி அமைய உள்ள இடங்களை பார்வையிட்டார். மேலும், அங்கே மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து, வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுடன் ஆலோசனை செய்தார்.

