/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பாரம்பரிய உணவு கண்காட்சி தானிய வகைகளில் சோப்பு
/
பாரம்பரிய உணவு கண்காட்சி தானிய வகைகளில் சோப்பு
ADDED : மார் 10, 2024 11:25 PM
குன்னுார்:குன்னுார் ஒய்.எம்.சி.ஏ., அரங்கில் பாரம்பரிய உணவு கண்காட்சி நடந்தது.
கண்காட்சியை நகராட்சி ஆணையாளர் பர்ஜானா தலைமை வகித்து துவக்கி வைத்து பேசுகையில் ''பாரம்பரிய உணவு வகைகளை உட்கொள்ள மக்கள் முன் வர வேண்டும். இதன் மூலம் பல்வேறு நோய்கள் வராமல் தடுக்கலாம்,'' என்றார்.
கண்காட்சியில், பல்வேறு வகையான அரிசியில் இருந்து தயாரித்த புட்டு மாவு, சப்பாத்தி மாவு, சேமியா, ஹெல்த் மிக்ஸ் வகைகள், 90 மிட்டாய் வகைகள், ஊறுகாய் தேன், தோடர், குரும்பா பழங்குடியினரின் கைவினை பொருட்கள், தானிய வகைகளில் தயாரித்த சோப்புகள் உட்பட பல்வேறு வகையான பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
டாக்டர் ஆனந்தவல்லி, வக்கீல் நாகதேவி, கன்டோன்மென்ட் பள்ளி ஆசிரியை சாந்தி, கன்டோன்மென்ட் முன்னாள் துணை தலைவர் வினோத் குமார், கராத்தே பயிற்சியாளர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். ஏற்பாடுகளை, வெளிச்சம் டிரஸ்ட் நிர்வாகிகள் வீரமணி, சூரிய பிரகாஷ், பீனா, மெர்சி செய்திருந்தனர்.

