ADDED : டிச 24, 2024 10:38 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார், ; உபதலை ஊராட்சியில், மன்ற துணைத்தலைவர் சுரேஷ், வார்டு உறுப்பினர்கள் தணிகாசலம் உட்பட சிலர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
இதில், 'டெண்டர் முறைகேடு, குப்பை அகற்றாதது; தேச தலைவர்களின் படங்களில் முன்னாள் ஊராட்சி தலைவரின் படத்தை இணைத்து வைத்தது,' உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண கோரி நேற்று முன்தினம் காலை, 11:00 மணிக்கு போராட்டம் துவக்கினர். அன்று மாலை அங்கு வந்த பஞ்சாயத்து உதவி இயக்குனர் சரவணன், ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெய்சங்கர் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர்.
பிரச்னைக்கு தீர்வு காண்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து, இரவு, 7:30 மணிக்கு போராட்டம் கைவிடப்பட்டது.

