/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாய்பாபா கோவிலில் ஏழாம் ஆண்டு விழா
/
சாய்பாபா கோவிலில் ஏழாம் ஆண்டு விழா
ADDED : பிப் 08, 2024 10:30 PM

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே உள்ள சாய்பாபா கோவிலில், ஏழாம் ஆண்டு விழா நடைபெற்றது.
மேட்டுப்பாளையம்-காரமடை சாலையில், குட்டையூரில் மாதேஸ்வரன் மலை அருகே, சாய்பாபா கோவில் உள்ளது. இங்கு கோவில் கட்டி ஆறு ஆண்டுகள் முடிந்து, ஏழாம் ஆண்டு துவங்கியது. இதை முன்னிட்டு நேற்று ஆண்டு விழாவும், சிறப்பு பூஜையும் நடந்தது.
கோவிலில் நடை திறந்து காலை, 5:30 மணிக்கு ஆரத்தியும், அதைத் தொடர்ந்து சாய் சேவா சங்கத்தின் பஜனையும், நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தன. மாலை, 4:30 மணிக்கு லிங்காபுரம் கலைவாணி வள்ளி கும்மி குழுவினரின், கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், 50க்கும் மேற்பட்ட ஆண், பெண்கள் பங்கேற்றனர்.
மாலை, 6:30 மணிக்கு அபிஷேக் ராஜு மற்றும் சவுமியா அபிஷேக் ராஜு குழுவினரின் சொற்பொழிவும், பஜனை பாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை சத்குரு சாய் சேவா சங்கத்தினர் செய்தனர்.

