/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
5 கிலோ தக்காளி 50 ரூபாய்க்கு விற்பனை
/
5 கிலோ தக்காளி 50 ரூபாய்க்கு விற்பனை
ADDED : மார் 20, 2024 10:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம், : கோவையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சாகுபடி செய்யப்பட்ட தக்காளியின் அறுவடை நிறைவடையும் நிலையில் உள்ளது. அதை அறுவடை செய்து, மார்க்கெட்டுகளுக்கு விற்பனைக்காக அனுப்பும் பணி நடந்து வருகிறது.
இது தவிர, பழனி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கடந்த ஒரு சில நாட்களாக ஏற்றம் கண்டு இருந்த தக்காளி விலை மீண்டும் இறங்க துவங்கி, 5 கிலோ தக்காளி, 50 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.

