/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பள்ளி மேலாண்மை குழு கூட்டம் மேம்பாடு குறித்து தீர்மானம்
/
பள்ளி மேலாண்மை குழு கூட்டம் மேம்பாடு குறித்து தீர்மானம்
பள்ளி மேலாண்மை குழு கூட்டம் மேம்பாடு குறித்து தீர்மானம்
பள்ளி மேலாண்மை குழு கூட்டம் மேம்பாடு குறித்து தீர்மானம்
ADDED : டிச 17, 2025 06:42 AM

கோத்தகிரி: கோத்தகிரி ஒரசோலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், மேலாண்மை குழு கூட்டம் நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன் வரவேற்றார்.
பள்ளியில் திறந்த வகுப்புகள், மாற்றுத்திறனாளி மாணவர்களின் நலன், தடையற்ற குடிநீர், கைவரி பராமரிப்பு, மணற்கேணி துாதுவர்கள், மன்ற செயல்பாடுகள், ஆதார் புதுப்பித்தல் மற்றும் மகிழ்முற்றம் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட, பரதநாட்டிய கலைஞர் சிவராஜ், மாணவர்களுக்கு நடன பயிற்சி அளித்ததுடன், 'இசைக்கலை, நடன கலைகள் மாணவர் மனதை ஒருமுகப்படுத்தி, கற்றல் திறனை மேம்படுத்தும்,' என, தெரிவித்தார்.
கூட்டத்தில், ஆங்கில ஆசிரியை சோனியா, மருத்துவர் திவ்யா உட்பட, பள்ளி மேலாண்மை குழு மற்றும் பி.டி.ஏ., நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். பள்ளி ஆசிரியை கமலா நன்றி கூறினார்.