/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பள்ளி அளவிலான கால்பந்து போட்டி; குன்னுார் ஜோசப் பள்ளி அணி வெற்றி
/
பள்ளி அளவிலான கால்பந்து போட்டி; குன்னுார் ஜோசப் பள்ளி அணி வெற்றி
பள்ளி அளவிலான கால்பந்து போட்டி; குன்னுார் ஜோசப் பள்ளி அணி வெற்றி
பள்ளி அளவிலான கால்பந்து போட்டி; குன்னுார் ஜோசப் பள்ளி அணி வெற்றி
ADDED : செப் 07, 2025 08:57 PM
குன்னுார்; குன்னுாரில், பள்ளிகளுக்கு இடையே நடந்த கால்பந்து போட்டிகள் நடந்தது.
இதில், 19 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு இடையேயான, இறுதிப் போட்டியில், புனித ஜோசப் ஆண்கள் மேல்நிலை பள்ளியும், வெலிங்டன் ஹோலி இன்னோசன்ட் பள்ளியும் மோதின. அதில், குன்னுார் புனித ஜோசப் பள்ளி வெற்றி பெற்று கோப்பையை வென்றது.
ஹோலி இன்னோசன்ட் பள்ளி முதன் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது என்பது குறிப்பிடதக்கது. இதில், அதிக கோல் அடித்ததில் குன்னுார் புனித ஜோசப் பள்ளியை சேர்ந்த நெல்சன் ஜேக்கப், சிறந்த தடுபாட்டக்காரராக திறன்குமார், சிறந்த கோல் கீப்பராக பவனேஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதற்கான பரிசுகளை பள்ளி முதல்வர் ஜான் பிரிட்டோ வழங்கினார். ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள், மாணவர்கள் செய்தனர்.