ADDED : டிச 12, 2025 07:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்: கூடலுார், புத்துார்வயல் கம்மாத்தி சாலையோரம் ஏற்பட்டுள்ள பள்ளத்தால், சாலை சேதமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கூடலுார்- மண்வயல் சாலை கம்மாத்தி பகுதியில் இருந்து, புததுார்வயல் சாலை பிரிந்து செல்கிறது. இச்சாலையை, கம்மாத்தி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இச்சாலை, ஏற்கனவே பல இடங்களில் சேதமடைந்து சீரமைக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில், இச்சாலையோர தடுப்பு சுவரை ஒட்டி பள்ளம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, ஏற்பட்டு வரும் சேதத்தால் பள்ளம் பெரிதாகி போக்குவரத்து துண்டிக்கும் அபாயம் உள்ளது.
இதனை தவிர்க்க, அதிகாரிகள் இப்பகுதியை ஆய்வு செய்து, சாலையோரம் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

