/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மீண்டும் வந்த யானை கூட்டம் விவசாய பொருட்கள் துவம்சம்; கொலக்கம்பையில் விளை பொருட்கள் சேதம்

ADDED : டிச 12, 2024 09:42 PM
குன்னுார்; குன்னுார் கொலக்கம்பை அருகே மீண்டும் முகாமிட்டுள்ள காட்டு யானைகள் மேரக்காய் தோட்டங்களில் புகுந்து நாசம் செய்து வருகிறது.
குன்னுார் கொலக்கம்பை, துாதுார்மட்டம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு பிறகு, 5 காட்டு யானைகள் சமவெளி பகுதியில் இருந்து வந்து முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் இங்குள்ள தோட்டங்களில் புகுந்து மேரக்காய் செடிகளை சேதம் செய்து, மேரக்காய்களை உட்கொண்டும் செல்கின்றன.
தடுப்பு வேலிகளை உடைத்தும், விளை பொருட்களை சேதம் செய்துள்ளதால், விவசாயிகள் நஷ்டமடைந்துள்ளனர்.தோட்டக்கலை துறையினர் ஆய்வு மேற்கொண்டு நிவாரணம் வழங்க வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தேயிலை தோட்டம் மற்றும் சாலையில் உலா வந்த இந்த யானைகளை, குன்னுார் வனத்துறையினர் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
வனத்துறையினர் கூறுகையில்,'இப்பகுதியில் மீண்டும் யானைகள் வருவதால், அவை செல்லும் வழித்தடங்களில் மக்கள் நடந்து செல்லவும், தேயிலை தோட்டங்களில் பசுந்தேயிலை பறிக்கவும் செல்ல வேண்டாம்,' என்றனர்.