/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மலை ரயில் பாதையில் கரடி கண்காணிக்க கோரிக்கை
/
மலை ரயில் பாதையில் கரடி கண்காணிக்க கோரிக்கை
ADDED : டிச 31, 2025 08:01 AM
குன்னுார்: குன்னுார்- ஊட்டி மலை ரயில் பாதையில் பகல் நேரங்களில் கரடி நடமாட்டம் உள்ளது.
குன்னுார் மற்றும் ஊட்டி பகுதியில், வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீருக்காக குடியிருப்பு பகுதிகளுக்கு வருவது அதிகரித்துள்ளது.
இந்நிலையில், குன்னுார்-ஊட்டி மலை ரயில் பாதையில் லவ்டேல் அருகே ரயில் தண்டவாளத்தில் வந்து சிறிது நேரம் அமர்ந்த கரடி அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது. அவ்வழியாக சென்றவர்கள், அதனை 'வீடியோ' எடுத்து வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.
இரவில் மட்டுமே வந்து சென்ற கரடிகள், தற்போது பகலிலும் வந்து செல்வதால் இப்பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகள் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
மக்கள் கூறுகையில், 'வனத்துறையினர் ஆய்வு செய்து கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளவும், கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதிக்குள் விடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

