/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
விபத்தை ஏற்படுத்தும் மரம் அகற்றினால் ஆபத்தில்லை
/
விபத்தை ஏற்படுத்தும் மரம் அகற்றினால் ஆபத்தில்லை
ADDED : மார் 04, 2026 06:01 AM

கூடலுார்: 'கூடலுார் நந்தட்டி அருகே, கோழிக்கோடு சாலையோரம், விபத்துகளை ஏற்படுத்தும் ஆபத்தான மரத்தை அகற்ற வேண்டும்,' என, வாகன ஓட்டுனர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கூடலுார் நந்தட்டி சாலையோரம் உள்ள இரண்டு மரங்களின் அடிப்பகுதியில் வாகனங்கள் மோதி, அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. பலர் காயம் அடைந்துள்ளனர். இதனால், மரத்தை அகற்றி சாலையை விரிவுபடுத்த மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அதற்கான நடவடிக்கை இல்லை.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து தக்காளி ஏற்றி வந்த லாரி, இரவு, 7:00 மணிக்கு இப்பகுதியில், எதிரே வந்த வாகனத்திற்கு வழி விடும்போது மரத்தில் மோதி, கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லாரியில் இருந்த தக்காளி முழுவதும் சாலையில் சிதறியது. ஓட்டுனர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். வாகன போக்குவரத்துக்கு சிரமம் ஏற்பட்டது. இதனிடையே சாலையில் சிதறி கிடந்த தக்காளிகளை அப்பகுதியினர் மற்றும் அவ்வழியாக சென்றவர்கள் எடுத்து சென்றனர்.
அப்பகுதியினர் கூறுகையில், 'சாலையை ஒட்டி உள்ள இந்த மரத்தில், அடிக்கடி வாகனங்கள் மோதி விபத்து ஏற்படுகிறது. இதனை அகற்ற இதுவரை நடவடிக்கை இல்லை. இதன் காரணமாகவே தக்காளி லாரி விபத்தில் சிக்கியது. மீண்டும் விபத்து ஏற்படுவதை தவிர்க்க, மரத்தை அகற்ற வேண்டும்,' என்றனர்.

