ADDED : மார் 12, 2024 11:23 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்:நீலகிரி மாவட்டத்தில் பிறை தென்பட்டதால், ரம்ஜான் நோன்பு தொழுகையுடன் துவங்கப்பட்டது.
குன்னுார் பெட்போர்ட் பள்ளி வாசலில், மாவட்ட அரசு காஜி முஜிபூர் ரஹ்மான் காசிமி தலைமையில், நேற்று முன்தினம் இரவு ரமலான் நோன்பு துவங்கியது.
பெரிய பள்ளிவாசலில் இமாம் வாசிம் அக்ரம் மாஸாஹிரி, சின்ன பள்ளி வாசலில் இமாம் முப்திவாசீம் ஹசனி, கே.எம்.கே., நகர் பள்ளிவாசலில் இமாம் ஜகாங்கீர் உலுாமி, ஓட்டுப்பட்டறை பள்ளிவாசலில் முகமது மழாஹிரி, வெலிங்டன் பள்ளிவாசலில் நெகமத்துல்லா தாவூதி, அருவங்காடு பள்ளிவாசலில் சுஹைப் அஸ்லம் மழாஹரி ஆகியோர் தலைமையில், நோன்பு திறக்கப்பட்டு தொழுகைகள் நடந்தன.
தொடர்ந்து, 30 நாட்களுக்கு சிறப்பு தொழுகை நடக்கிறது. மாலை நேரத்தில் நோன்பு கஞ்சி வழங்கப்பட்டு வருகிறது.

