/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டி அரசு கலை கல்லுாரியில் 20ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
/
ஊட்டி அரசு கலை கல்லுாரியில் 20ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
ஊட்டி அரசு கலை கல்லுாரியில் 20ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
ஊட்டி அரசு கலை கல்லுாரியில் 20ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
ADDED : டிச 19, 2025 05:21 AM
ஊட்டி: ஊட்டியில், நாளை (20ம் தேதி) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் வீரவேல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
நீலகிரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாநில ஊரக / நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், 20ம் தேதி, ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
முகாமில், கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி உட்பட, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 100க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
முகாமில், 8ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வகுப்பு தேர்ச்சி, பட்டதாரிகள், பட்டய படிப்பு படித்தவர்கள், ஐ.டி.ஐ., கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள் மற்றும் டிரைவர்கள் என, அனைத்து விதமான கல்வியாளர்களும் எவ்வித கட்டணம் இல்லாமல் கலந்து கொள்ளலாம். மாவட்டத்தில் ஆர்வமாக உள்ள வேலைநாடுனர்கள் அனைவரும் இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம். விருப்பம் உள்ளவர்கள், www.tn Privatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் முன் பதிவு செய்து கொள்ளலாம்.
மாவட்டத்தில் உள்ள தனியார் துறை நிறுவனங்கள் முகாமில் பங்கேற்று, தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்து கொள்ளலாம். அவர்களும், மேற்கண்ட இணைய முகவரியில் தங்கள் நிறுவனங்கள் குறித்த விபரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
முகாமில், பல்வேறு அரசு துறைகள் தொடர்பான அரங்கங்கள் துறை சார்பாக, பல்வேறு நலத்திட்டங்கள் குறித்த தகவல்களை பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்படுகிறது. எனவே, மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் இம்முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.
மேலும் விபரங்களுக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ, அல்லது, 0423-2444004/ 9489026936 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

