ADDED : மார் 12, 2024 01:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்;குன்னுாரில் போக்சோ சட்டத்தின் கீழ் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
குன்னுார் கொலக்கம்பை அருகே உள்ள எஸ்டேட் பகுதியை சேர்ந்த தோட்ட தொழிலாளி ஜெய்சங்கர்,48. கடந்த சில தினங்களுக்கு முன், 7 வயதுள்ள வட மாநில சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். பெற்றோர் போலீசில் கொடுத்தனர். தலைமறைவாகி மீண்டும் திரும்பிய ஜெய்சங்கரை, கொலக்கம்பை போலீசார் பிடித்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.
அவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, குன்னுார் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

