/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மாசு கலந்த தண்ணீருடன் வந்த மக்கள் கலெக்டரிடம் மனு
/
மாசு கலந்த தண்ணீருடன் வந்த மக்கள் கலெக்டரிடம் மனு
ADDED : பிப் 14, 2024 12:42 AM
ஊட்டி;ஊட்டி கலெக்டர் அலுவலகத்துக்கு, மாசு கலந்த தண்ணீரை சுமந்து வந்த பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
ஊட்டி அருகே குந்தா பிக்கட்டி சிவசக்தி நகர் பகுதியில், 40 ஆண்டுகளுக்கு மேலாக, 100க்கு மேற்பட்ட குடும்பங்களில் மக்கள் வசிக்கின்றனர். இக்கிராமத்திற்கு, கொடமரா நீர் ஆதாரத்தில் இருந்து தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. இந்த நீர் ஆதாரத்தை சுற்றிலும், தேயிலை மற்றும் காய்கறி தோட்டங்கள் அமைந்துள்ளதால், தோட்டத்திற்கு பயன்படுத்தும் ரசாயனம் கலந்த உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து தண்ணீரில் கலக்கிறது. மேலும், துணி துவைப்பதாலும், இயற்கை உபாதை கழிப்பதாலும் தண்ணீர் நிறம் மாறி மாசடைந்துள்ளது. இதனால், கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து, பிக்கட்டி பேரூராட்சி நிர்வாகத்திற்கு தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், 'மாற்று ஏற்பாடாக, முள்ளிகூர் வட்டப்பாறை நீர் ஆதாரத்தில் இருந்து, தண்ணீர் கிடைக்க துறை அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும்,' என, மனு அளித்தனர்.
அதிகாரிகள் கூறுகையில், 'தண்ணீர் மாதிரிக்கு எடுக்கப்பட்டு, ஆய்வுக்கு உட்படுத்தி உரிய நடவடிக்கை எடுப்படும்,' என்றனர்.

