/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஆய்வுக்காக குவித்து வைக்கப்பட்ட குப்பை சுகாதார பாதிப்பால் மக்கள் அதிருப்தி சுகாதார பாதிப்பால் மக்கள் அதிருப்தி

ADDED : ஜன 23, 2025 11:01 PM

பந்தலுார்; நெல்லியாளம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், குப்பையை அகற்றாததால் சுகாதாரம் பாதிக்கப்பட்டு மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
பந்தலுார், நெல்லியாளம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், மொத்தம், 21 வார்டுகள் உள்ளது. இந்த வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் கூடலுார் பகுதியை சேர்ந்த தனியார் ஒருவர் மூலம் குப்பைகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த சில வாரங்களாக குப்பைகளை முறையாக அகற்றாமல் உளளதாக, பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக உப்பட்டி, தேவாலா, பந்தலுார் பகுதிகளில் குப்பை கழிவுகளை அகற்றாமல், மூட்டைகளில் கட்டி பஜார் மற்றும் மக்கள் நடமாடும் பகுதிகளில் வைத்துள்ளனர். ஓட்டல், இறைச்சி கடைகள் மற்றும் காய்கறி கடை கழிவுகளில் இருந்து புழுக்கள் வெளியேறி, பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
'குப்பைகளை முறையாக கொட்டி சுகாதார பாதிப்பை தவிர்க்க வேண்டும்,' என, நகராட்சி நிர்வாகம் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், இது போன்ற பணிகளால் மக்கள் கடுப்படைந்து உள்ளனர்.
மேலும், நகராட்சி உயரதிகாரிகள், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை ஆய்வு செய்வதற்காக வந்ததால், இது போன்று குப்பையை குவித்து வைத்திருப்பதாக புகார் எழுந்தது.
நெல்லியாளம் நகராட்சி கமிஷனர் முனியப்பன் கூறுகையில், ''குப்பைகள் அகற்றாத குறித்து இதுவரை எனக்கு யாரும் தெரிவிக்கவில்லை. எனவே குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.