/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பழங்குடியினர் கிராமங்களில் அதிகாரிகள் ஆய்வு
/
பழங்குடியினர் கிராமங்களில் அதிகாரிகள் ஆய்வு
ADDED : டிச 24, 2025 06:26 AM

பந்தலுார்: பந்தலுார் அருகே பாதிரிமூலா, பழங்குடியின கிராமத்தில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
பந்தலுார் அருகே சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட, பாதிரிமூலா கிராமத்தில் பணியர் சமுதாய பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு சாலை, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி தர வலியுறுத்தி, சிந்து தலைமையில் கிராம மக்கள் மாவட்ட கலெக்டரிடம் புகார் கொடுத்தனர்.
தொடர்ந்து கலெக்டர் அறிவுரைப்படி, பழங்குடியினர் நல தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, மின்வாரிய கோட்ட பொறியாளர் முத்துக்குமார், உதவி மின் பொறியாளர்கள் தர்வேஷ், கார்த்திகேசன் மற்றும் ஊழியர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். அதனையடுத்து மின்வாரியம் சார்பில், மின் சப்ளை கொடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. சாலை மற்றும் குடிநீர் வசதிகள் ஏற்படுத்தி தருவது குறித்து, ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தெரிவித்து உரிய தீர்வு காணப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
கிராம மக்கள் கூறுகையில், 'தங்களின் தேவைகள் குறித்து, ஊராட்சி ஒன்றிய அதிகாரியிடம் பலமுறை தகவல் தெரிவித்தும், யாரும் கண்டுகொள்ளவில்லை. மாவட்ட ஆட்சியரிடம் நேரில் முறையிட்டவுடன், தீர்வு ஏற்படுத்த வருவாய் மற்றும் மின் வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,' என்றனர்.

