ADDED : அக் 25, 2025 01:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னூர்: குன்னூர் -- மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் மண்சரிவு சீரமைக்கப்பட்டதால் நேற்று மலை ரயில் இயக்கம் துவங்கியது.
நீலகிரி மாவட்டத்தில் கன மழையால், குன்னூர் - மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில், கடந்த 18ம் தேதி பாறைகள் உருண்டு விழுந்ததுடன், மண் சரிவும் ஏற்பட்டதால், மேட்டுப்பாளையம் -- ஊட்டி மலை ரயில் ரத்து செய்யப்பட்டது. தொடர் மழையாய் ஹில்குரோவ் உட்பட 7 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. நேற்று முன்தினம் மேட்டுப்பாளையத்தில் இருந்து தனி ரயிலில் மூன்று பொக்லைன் கொண்டு வரப்பட்டு அகற்றும் பணிகள் நடந்தன.
பணிகள் நிறைவு பெற்று, 5 நாட்களுக்கு பிறகு நேற்று மேட்டுப்பாளையம் --- ஊட்டி மலை ரயில் இயக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணியர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

