/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'தாய்மார்கள் ஊட்டச்சத்து உணவை உட்கொள்ள வேண்டும்' : விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அறிவுரை
/
'தாய்மார்கள் ஊட்டச்சத்து உணவை உட்கொள்ள வேண்டும்' : விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அறிவுரை
'தாய்மார்கள் ஊட்டச்சத்து உணவை உட்கொள்ள வேண்டும்' : விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அறிவுரை
'தாய்மார்கள் ஊட்டச்சத்து உணவை உட்கொள்ள வேண்டும்' : விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அறிவுரை
ADDED : மார் 13, 2024 10:02 PM

பந்தலுார் : ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில், 'போஷன் பக்வாடா 2024' எனும் தலைப்பில், ஊட்டச்சத்துடன் கூடிய முன்பருவ கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி, பந்தலுார் அருகே சோலாடி அங்கன்வாடி மையத்தில் நடந்தது.
அங்கன்வாடி பணியாளர் சுனிதா வரவேற்றார். வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் தலைமை வகித்து பேசுகையில், ''தாய்மார்கள் ஊட்டச்சத்து நிறைந்தவர்களாக இருந்தால் மட்டுமே, நல்ல குழந்தைகளை உருவாக்க முடியும். அதேபோல குழந்தைகளுக்கும், உரிய மருத்துவ ஆலோசனையுடன் கூடிய, உணவுகளை கொடுக்க வேண்டும். எனவே, தினசரி ஏதேனும் ஒரு உணவில் காய்கறி, கீரை, முட்டை, பழங்கள் போன்றவற்றை உட்கொளாவது அவசியம்,'' என்றார்.
முன்னிலை வகித்த ஜி.டி.ஆர். பள்ளி தலைமை ஆசிரியர் விக்னேஸ்வரன் பேசுகையில், ''பெற்றோர் ஊட்டச்சத்து நிறைந்த குழந்தைகளை வளர்க்க முன் வந்தால் மட்டுமே அவர்களை வல்லமை படைத்த மாணவர்களாக மாற்ற முடியும். பள்ளியில் பழங்குடியின மாணவர்களுக்கு மூன்று வேலையும், சத்து நிறைந்த உணவுகள் வழங்கப்படும் நிலையில் பெற்றோர் தவறாமல் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது அவசியம்,'' என்றார்.
குழந்தைகள் வளர்ச்சித் திட்ட ஒருங்கிணைப்பாளர் ரகுவரன் பேசுகையில், ''அங்கன்வாடி வரும் குழந்தைகளுக்கு நல்ல ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் மற்றும் புரதசத்து நிறைந்த உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. பெற்றோரும் கடைகளில் விற்பனை செய்யப்படும் 'பாஸ்ட் புட்' பொருட்களை வாங்கி கொடுக்காமல், நல்ல உணவுப் பொருட்களை வாங்கி கொடுக்க வேண்டும்,'' என்றார்.
தொடர்ந்து, சமூக பாதுகாப்பு திட்ட பாலின வல்லுனர் இளையராஜா, வக்கீல் கணேசன், மேற்பார்வையாளர்கள் மேரி, ராஜேஸ்வரி, ஆசிரியர் முருகன் உள்ளிட்டோர் பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர்.
ஊட்டச்சத்து உணவு பொருட்கள் கண்காட்சி நடத்தப்பட்டு, பெற்றோர், மாணவர்கள், குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணியாளர்கள் செய்திருந்தனர். முதல் நிலை மேற்பார்வையாளர் வளர்மதி நன்றி கூறினார்.

