/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மணிமேகலை விருது; கலெக்டர் பாராட்டு
/
மணிமேகலை விருது; கலெக்டர் பாராட்டு
ADDED : அக் 08, 2024 11:21 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி : மாநிலத்தில், சிறந்த ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு தேர்வு செய்யப்பட்டு மணி மேகலை விருது வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் நெடுகுளா ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்கு மணிமேகலை விருது, 3 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. அதேபோல், மாநில அளவில் சிறந்த மகளிர் சுய உதவிக்குழுவாக தேர்வு செய்யப்பட்ட சரஸ்வதி மகளிர் சுய உதவிக்குழுவிற்கு மணிமேகலை விருது, ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது.
விருது பெற்ற மகளிர் குழுவினருக்கு கலெக்டர் லட்சுமிபவ்யா பாராட்டு தெரிவித்தார்.

