நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பந்தலுார்: பந்தலுார் சுற்றி வட்டார பகுதிகளில், சிறுத்தைகள் மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு வருவது, சமீப காலமாக அதிகரித்து வருகிறது.
அடிக்கடி சேலக்குன்னா குடியிருப்புகளுக்கு அருகே மரத்தில் சிறுத்தை முகாமிட்டது.
அதேபோல், படைச்சேரி என்ற இடத்தில் வீட்டு வளாகத்திற்குள் வந்த சிறுத்தை கோழியை கவ்வி சென்றது. அதேபோல், காலையில், சேரங்கோடு அருகே படைச்சேரி சாலையில் காட்டெருமை ஒன்று வந்துள்ளது.
இதனை அறியாமல் வீட்டிலிருந்து வேலைக்கு செல்வதற்காக சாலைக்கு வந்த மூதாட்டி ஒருவர் ஓடி உயிர் தப்பினார்.
எனவே, இப்பகுதிகளில் வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு, வனப்பகுதிக்குள் விலங்குகளை விரட்ட வேண்டும்.

