/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நூறு இடங்களில் குடிநீர் குழாய் கசிவு பணியில் மெத்தனம்:கவுன்சிலர்கள் சரமாரி புகார்
/
நூறு இடங்களில் குடிநீர் குழாய் கசிவு பணியில் மெத்தனம்:கவுன்சிலர்கள் சரமாரி புகார்
நூறு இடங்களில் குடிநீர் குழாய் கசிவு பணியில் மெத்தனம்:கவுன்சிலர்கள் சரமாரி புகார்
நூறு இடங்களில் குடிநீர் குழாய் கசிவு பணியில் மெத்தனம்:கவுன்சிலர்கள் சரமாரி புகார்
ADDED : மார் 12, 2024 12:00 AM

அன்னுார்:அன்னுார் பேரூராட்சியில் 100 இடங்களில் குடிநீர் குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளது என கவுன்சிலர்கள் மன்ற கூட்டத்தில் சரமாரியாக புகார்
தெரிவித்தனர்.
அன்னுார் பேரூராட்சி மன்ற கூட்டம் தலைவர் பரமேஸ்வரன் தலைமையில் நேற்று நடந்தது. செயல் அலுவலர் (பொறுப்பு)பெலிக்ஸ், துணைத் தலைவர் விஜயகுமார் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 20 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. கடந்த மாதம் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரப்பட்டதுக்கு ஒப்புதல் அளிக்கும் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
எதிர்ப்பு
அப்போது டெண்டர் விட்டது எங்களுக்கு தெரிவிக்கவில்லை. எனவே இதற்கு ஒப்புதல் அளிக்க கூடாது என கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அந்த தீர்மானம் நிறுத்தி வைக்கப்பட்டது. வார்டு எண் 1, 13, 15, ஆகியவற்றில் லே-அவுட் அமைக்க ஒப்புதல் கோரி தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன.
அப்போது கவுன்சிலர்கள், 'மழை நீர் செல்லும் பாதையை தடை செய்து அமைக்கப்படும் 'லே அவுட்'டுகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது. நேரடியாக கள ஆய்வு செய்த பிறகே ஒப்புதல் அளிக்க வேண்டும்,' என எதிர்ப்பு தெரிவித்தனர்.
கவுன்சிலர் மணிகண்டன் பேசுகையில், பேரூராட்சியில் குடிநீர் வடிகால் வாரிய பிரதான குழாய், பேரூராட்சி பிரதான குழாய், வீட்டுக்கு செல்லும் கிளை குழாய் என 100 இடங்களில் கசிவு உள்ளது. மிகக் குறைந்த ஊழியர்களை வைத்துக் கொண்டு இந்த கசிவுகளை அடைக்க முடியாது. தினமும் பல ஆயிரம் லிட்டர் நீர் வீணாக செல்கிறது. தொழில்நுட்ப பணியாளர்களை கூடுதலாக நியமிக்க வேண்டும், என்றார்.
மெத்தனம்
கவுன்சிலர் செல்வி பேசுகையில், 15 வது வார்டில் போர்வெல் வறண்டு விட்டது. உப்பு தண்ணீர் கிடைக்காமல் மக்கள் அலைமோதுகின்றனர், என்றார்.
துணைத் தலைவர் விஜயகுமார் பேசுகையில், முந்தைய குடிநீர் திட்டத்தில் அன்னுாரில் ஐந்து இடங்களில் பொதுக் குழாய்கள் அமைக்க வேண்டும். தற்போது பொது குழாய்கள் குறைவாக இருப்பதால் மக்கள் மணி கணக்கில் காத்திருக்கின்றனர், என்றார்.
கவுன்சிலர் ரங்கநாதன் பேசுகையில்,சொத்துவரி செலுத்தி குடிநீர் டிபாசிட் கட்டணம் செலுத்தி ஐந்து ஆண்டுகள் ஆகியும் இதுவரை குடிநீர் இணைப்பு தரவில்லை. தெருவிளக்கு அமைக்கவில்லை, என்றார்.
கவுன்சிலர்கள் பேசுகையில், 'சில வீடுகளில் செப்டிக் டேங்க் கழிவுநீரை பொது வடிகாலில் திறந்து விடுகின்றனர். சில வீடுகளில் மோட்டார் வைத்து நீரை உறிஞ்சுகின்றனர் இத னால் மற்ற வீடுகளுக்கு போதுமான குடிநீர் செல்வதில்லை. அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக உள்ளனர்' என சரமாரியாக புகார் தெரிவித்தனர்.
வீடுகளில் வழங்கப்படும் குடிநீர் போர்வெல் நீர் போல் உள்ளது என்று புகார் கூறியதையடுத்து சுத்திகரிப்பு நிலையத்தில் நீர் சேகரிக்கப்பட்டு கோவை ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது.
அதனுடைய முடிவை விரைவில் பெற்று தர கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் பங்கேற்றனர்.

