/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மழையால் பர்லியாரில் மண்சரிவு; பள்ளிக்குள் வெள்ளம்
/
மழையால் பர்லியாரில் மண்சரிவு; பள்ளிக்குள் வெள்ளம்
ADDED : அக் 09, 2024 10:03 PM

குன்னுார் : குன்னுார் பர்லியார் பகுதியில் பெய்த கன மழையால், ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் மண் சேறுடன் மழைநீர் புகுந்து பாதிப்பு ஏற்பட்டது.
குன்னுார் சுற்று வட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையில், குன்னுார்- மேட்டுப்பாளையம் மலை பாதையில் விரிவாக்க பணி நடக்கும் இடத்தில் மண்சரிவு ஏற்பட்டு, ஊராட்சி தொடக்க பள்ளிக்குள் வெள்ளம் புகுந்து சேறும், சகதியுமாக மாறியது.
நேற்று காலை மாணவ, மாணவியரை அழைத்து வந்த பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள், பள்ளி வகுப்பறைகள் சமையலறைக்குள் வெள்ளம் தேங்கி நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
பள்ளி குழந்தைகளை அருகில் உள்ள சத்துணவு மையத்தில் அமர வைத்து பாடம் நடத்தினர்.
ஊராட்சி பணியாளர்கள் துாய்மை பணிகளை மேற்கொண்டனர். மழை அதிகரிக்கும் பட்சத்தில் இங்குள்ள குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்து பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
மக்கள் கூறுகையில், 'மழை தீவிரமடைந்தால் மீண்டும் பாதிப்பு ஏற்படும் என்பதால் நெடுஞ்சாலை பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்,' என்றனர்.

