/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலையில் தொடரும் போக்குவரத்து நெரிசல்; ஆக்கிரமிப்புகளை அகற்றுவது அவசியம்
/
சாலையில் தொடரும் போக்குவரத்து நெரிசல்; ஆக்கிரமிப்புகளை அகற்றுவது அவசியம்
சாலையில் தொடரும் போக்குவரத்து நெரிசல்; ஆக்கிரமிப்புகளை அகற்றுவது அவசியம்
சாலையில் தொடரும் போக்குவரத்து நெரிசல்; ஆக்கிரமிப்புகளை அகற்றுவது அவசியம்
ADDED : மார் 12, 2024 01:21 AM

குன்னுார்;குன்னுார் டி.டி.கே., சாலையோரத்தில் நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் அகற்றாததால் நாள்தோறும் வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
குன்னுார் பஸ் ஸ்டாண்ட் அருகே டி.டி.கே., சாலை, வெலிங்டன் ராணுவ பகுதிக்கு செல்லும் முக்கிய வழியாக உள்ளது. மேலும், ஜோசப் பள்ளி, சி.எஸ்.ஐ., பள்ளி நெடுஞ்சாலை துறை பொதுப்பணித்துறை அலுவலகங்கள், நீதிமன்றம், கட்டுமான பொருட்கள் விற்பனை கடைகள் உள்ளதால் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் நடந்து செல்கின்றனர். நுாற்றுகணக்கான வாகனங்களும் சென்று வருகிறது. கம்பிசோலை, பேரட்டி பஸ்கள் இந்த வழியாக செல்கின்றன.
இந்த சாலையோரத்தில், பழுதடைந்த வாகனங்கள் நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளது. இவற்றை அப்புறப்படுத்த நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தியும், போலீசாருக்கு புகார் தெரிவித்தும் அகற்றப்படவில்லை. பணி வாகனங்கள் முறையின்றி நிறுத்துவதும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.
நாள்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தொடர்கிறது பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் நடந்து செல்ல சிரமம் ஏற்படுகிறது.
மீண்டும் ஆக்கிரமிப்பு
கடந்த, 2018ம் ஆண்டு ஐகோர்ட் உத்தரவின் பேரில் இந்த பகுதியில் ஆற்றோர ஆக்கிரமிப்புகள் அகற்றி கடைகள் இடிக்கப்பட்டன. கட்டட இடிபாடுகள் முழுமையாக அகற்றப்படவில்லை. அந்த இடத்தில் ஷெட் அடித்து பல கடைகள் மீண்டும் வைக்கப்பட்டுள்ளன. ஆற்றோர ஆக்கிரமிப்புகளை வருவாய் துறையினர் முழுமையாக அகற்றவும், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

