/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஹெத்தையம்மன் தேர் திருவிழா கோலாகலம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
/
ஹெத்தையம்மன் தேர் திருவிழா கோலாகலம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
ஹெத்தையம்மன் தேர் திருவிழா கோலாகலம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
ஹெத்தையம்மன் தேர் திருவிழா கோலாகலம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
ADDED : ஏப் 07, 2025 09:46 PM

ஊட்டி; ஊட்டி மாரியம்மன் கோவிலில் நடந்த ஹெத்தையம்மன் தேர் திரு விழாவில் திரளான படுகரின மக்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
ஊட்டியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் முதல் ஏப்., இரண்டாவது வாரம் வரை பல்வேறு சமூகத்தை சேர்ந்தவர்களால் உபயம் நிகழ்ச்சி சிறப்பாக நடத்தப்படுகிறது.
இதில், தேர் பவனி வெகு விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது.
நடப்பாண்டின் நிகழ்ச்சி கடந்த, 14 ம் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது.
நேற்று, நீலகிரியில் வாழும் படுகரின மக்களின் ஹெத்தையம்மன் திருவிழா நடந்தது. அதில், காமதேனு வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் தேர்பவனி நிகழ்ச்சி நடந்தது.
பக்தர்கள் புடைசூழ மாரியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்ட தேர் லோயர் பஜார், பஸ் ஸ்டாண்ட், மெயின் பஜார் வழியாக இரவு, 7:00 மணிக்கு கோயில் வந்தடைந்தது.
வழிநெடுக சிறப்பு பூஜை, படுகரின மக்கள் பாரம்பரிய உடையுடன் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடந்தது. கோவில் அருகே இசை கச்சேரி நிகழ்ச்சி நடந்தது.
வரும், 15ம் தேதி திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.

