sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ கட்டுமான தொழிலாளர்களுக்கு 'உதவும் கரங்கள்'

 கட்டுமான தொழிலாளர்களுக்கு 'உதவும் கரங்கள்'

 கட்டுமான தொழிலாளர்களுக்கு 'உதவும் கரங்கள்'


ADDED : மார் 25, 2026 05:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 25, 2026 05:51 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பந்தலுார்: பந்தலுார் அருகே உப்பட்டியில் கட்டுமான தொழிலாளர்களுக்காக, 'உதவும் கரங்கள்' அமைப்பு துவக்கப்பட்டது.

பந்தலுார் அருகே உப்பட்டி சுற்று வட்டார பகுதிகளில், அதிகளவிலான கட்டுமான தொழில் செய்யும் கட்டுமான தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களை ஒன்றினைத்து கட்டுமான தொழிலாளர்கள் நலச்சங்கம் துவக்கப்பட்டது.

மேலும், தொழிலாளர்கள் வேலைசெய்யும் போது பாதிப்பு ஏற்பட்டாலும், உடல்நிலை பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்கு உதவும் வகையில், 'உதவும் கரங்கள்' அமைப்பு துவக்கப்பட்டது.

தலைவர் மணி துவக்கி வைத்து பேசுகையில்,''கட்டுமான தொழில் கலைநயமிக்க பணியாக இருந்தாலும், ஆபத்து நிறைந்த தொழிலாகவும் உள்ளது. மேலும், கட்டுமான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளும்போது, பல்வேறு இடையூறுகளும் ஏற்படுகிறது. இதுபோன்ற தருணங்களில் பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக சங்கம் துவக்கப்பட்டது. தற்போது, 'உதவும் கரங்கள்' அமைப்பு துவக்கப்பட்டுள்ளது.

மாதந்தோறும் சந்தா செலுத்தும் உறுப்பினர்களுக்கு, மருத்துவ உதவி, குடும்பங்களில் இழப்புகள் ஏற்படும் போது உதவுவது, அரசின் நலத்திட்டங்களை கிடைக்க செய்வது உள்ளிட்ட தேவைகளுக்கு அமைப்பு துணை நிற்கும்,'' என்றார்.

நிகழ்ச்சியில், செயலாளர் ஷாஜி, பொருளாளர் ராமச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us